Wednesday, December 15, 2010

'இவர்கள் உருப்படவே மாட்டார்கள்'


இன்று அரசுப்பேருந்தில் காலை பயணத்தின் போது என்னுடன் ஒரு பெரியவரும் அரசுப்பள்ளி சிறுவர்களும் பயணம் செய்தனர். சிறுவர்கள் வழக்கம் போல் ஆடிப்பாடி வந்தனர். இதை கண்ட பெரியவர் இவர்களை பார்த்து 'இவர்கள் உருப்படவே மாட்டார்கள்' என்றார்.

எனக்கு தெரிந்து நாம் நாட்டில் மட்டுமே மூத்த குடிமக்கள் இளய குடிமக்களை அப்படி கூறுகின்றனர். இந்த வயோதிகர்களை பார்க்கும் போது கொஞ்சம் கஷ்டமாக இருந்தாலும் இவர்கள் எங்களுக்கு என்ன மாதிரியான உலகத்தை வைத்துள்ளனர். குப்பையான காடுகள் இல்லா உலகை கொடுத்துள்ளனர்.

இவர்களுக்கு என்ன உரிமை உள்ளது?

மேலும் அந்த பெரியவர் தன் பேரன் படிக்கும் மெட்ரிக் பள்ளி பற்றி பெருமையாக கூறினார்.

இது என்னை மேலும் யோசிக்க வைத்தது.

பள்ளிப் படிப்பை எல்லோருக்கும் சமமாக கொடுக்காதது யார் குற்றம்?

பள்ளிகள் ஏன் சமமாக நடத்த முடியவில்லை?

இதற்கு நாம் தானே காரணம்?

படிப்பை ஒருவருக்கு உயர்வாக கொடுக்கும் போது மற்றவருக்கு ஏன் அதை கொடுக்க முடியவில்லை?

இதற்கு காரணம் நாமும் நாம் அரசாங்கமும் தானே.

இன்று அரசுப்பள்ளி இல்லாத கிராமம் உள்ளது. அரசு மருத்துவமனை இல்லாத கிராமமும் உள்ளது.

ஆனால், அரசு மதுப்பான கடைகள் இல்லாத கிராமமோ ஏன் விதியோ கூட உண்டோ?

ஆனால் அனைத்திற்கும் காரணம் அரசு என்று நாம் தப்பிக்க முடியாது.

நாளைய சமுதாயதிற்கு நாம் என்ன விட்டு செல்கிறோம் என்பதை இந்த பெரியவர்கள் உணர வேண்டும்.

இதே தவறை நாம் இவர்களுக்கு செய்து கொண்டே இருந்தால் நாளைய சமுகம் நம்மை காறி உமிழும்.

இனியாவது நாம எதாவது செய்யணும் Boss..