Thursday, November 25, 2010

நாடக நடிகன்


இந்தியாவில் வாழும் இந்திய தமிழ் மீனவனை

இலங்கை இராணுவத்திடம் இருந்து காப்பாற்ற முடியவில்லை.

இவன் போய் ஈழ தமிழனை

இலங்கை இராணுவத்திடம் காப்பாற்ற போகிறானா ?

காக்கும் கடவுளின் பெயரை வைத்து கொண்டு

அழிக்கும் தொழிலை செய்கிறான்.

நாடக கலைஞனின் நாடகம்,

நம்பவைக்க சில ஊடகம்.

தலைவர்களிடம் மட்டுமே ஒற்றுமை,

நம்மிடமோ வேற்றுமை.

கேட்பவன் கேன்னையன் என்றால்

பெரியாரும் பஞ்சாங்கம் பார்த்தர்னு சொல்லுவாங்க...

போங்கப்பா .. போய்,

இனிமேலாவது பிள்ளை குட்டியை படிக்க வைங்கப்பா...

Friday, November 19, 2010

"இல்லை ஆனால் இருக்கு"..



"காஷ்மீரிகள் எப்போதும் தன்னை இந்தியன் என்று நினைத்தது இல்லை"

என்று உண்மையை சொன்னவங்கள விட்டுட்டாங்க.

ஆனால் நம்ம மீனவனுக்காக எதிரிகளுடன் சண்டை போடா தயார்

என்றவர்களை கைது பண்ணுவாங்க..

இவங்க ஒன்றை நன்றாக புரிந்து கொள்ளவேண்டும்..

இறையாண்மை என்பது நாட்டிற்கு உள்ளே இருக்க வேண்டும்..

வெளியே அல்ல...

இவங்க அதை உள்ளே இருப்பது போல் வெளியே காட்டிகிறங்க...

"இல்லை ஆனால் இருக்கு"..

அந்த காலம் முதல்

சளுகியனுக்கு சோழன் என்றால் ஆகாது,

சோழனுக்கு சிங்களவன் என்றால்ஆகாது,

பல்லவனுக்கு சளுகியன் என்றால் ஆகாது.

அது இன்று வரை தொடர்கிறது.

இதில் எங்கே ஒருமைப்பாடு உள்ளது ?

நாம் இங்கே இருந்து கேரளா போனால்

அவன் நம்மை பாண்டி என்று தான் பார்ப்பான்.

கர்நாடக போனால் தமிழன் என்பான்.

வேறு மாநிலம் போனால் மதராசி என்பான்.

யாராவது என்னை இந்தியனாக பார்த்தால் மட்டும்மே

என்னால் இந்தியன் என்பதை உணர முடியும்.

அதுவரை நான் தமிழன் மட்டுமே...

Monday, November 15, 2010

ஈழமும் நானும்..

ஈழமும் நானும்..


என்னிடம் என் நண்பர்கள், பெற்றோர்கள் கேட்கும் கேள்வி இது.

என் உனக்கு இந்த வேண்டாத வேலை ?
ஈழத்திற்கும் உனக்கும் என்ன சம்பந்தம்?
ஒரு IT Professional மாத்ரியாகவா பேசுகிறாய்?

இன்னும் பல கேள்விகள் ...

முதலில் ஈழம் பெயர் எப்படி வந்தது ?

தமிழ் நாட்டில் மதுரைக்கு அருகில் இருக்கும் ஊர் திருப்பரங்குன்றம். இங்கே தமிழ் கடவுள் பிறந்து திருமணம் செய்ததாக கூறுவார்கள். 1-ம் நுற்றாண்டில் இங்கு விட்டை இல்லம் என்றும் விட்டின் உரிமையாளரை ஈழர் என்றும் கூறுவார்கள் என்று palaeographical ஆய்வாளர்கள் கூறுகின்றனர். அதில் இருந்து வந்த சொல்லே ஈழம் ஆகும்.
ஒன்பதாம் நுட்ரண்டில் வாழ்ந்த சோழ, பலவ காலங்களில் இல்லன்கையை ஈழ தேசம், ஈழ வணிகம் என்றே அழைத்துள்ளனர்.
தமிழர் பெருமை பாடும் அகநானு று, குருந்தோகை போன்ற நூல்கயில் ஈழம் வார்த்தை உள்ளது. பட்டினபாலை நுல்லில் ஈழத்து உணவு பற்றி காவேரி பட்டினம் பற்றி எழதும் பொது கூறுப்படுள்ளது.

நான் பிறந்ததும் அதே திருப்பரன்குன்றதில் தான்.
நான் பிறந்த 1983-ம் வருடத்தில் தான் சிங்களவர்கள் தமிழர்களை பெரும் அளவு தாக்கினர்.
நான் பிறந்த மாதத்தை தான் கருப்பு ஜுலையாக அனுஸ்டிகபடுகிறது.
நான் பிறந்த தேதி தான் கரும் புலிகள் தினம் என கூறுகின்றனர்.

இதை விட நான் தமிழன்.
அதையும் விட நான் மனிதன்.

"மனிதர் நோக
மனிதர் பார்க்க
வாழ்க்கை இனி உண்டோ.."
-பாரதி.


மனிதனாக பிறந்ததினால் , மனிதனாக வாழுவதினால், மனிதர்களை நேசிபதினால், மனிதம் போற்றுவதினால் நான் ஈழத்தையும் ஈழமக்களையும் நேசிகின்றேன்.

-நன்றி.

Friday, November 12, 2010

ஏன் வேண்டும் ஈழம் ?


http://ragu2ugar.blogspot.com/



**எனக்கு தெரிந்த, படித்த குறிப்பை மட்டுமே பதிவு செய்கிறேன்.
இது என் ஈழ நண்பர்கள் அளித்த குறிப்புகள்.


இலங்கையின் பூர்வீக குடிமக்கள் தமிழர்களே! சிங்களவ‌ர்களல்லர்!!

இலங்கை - தமிழர்களுக்கே சொந்தம் - மறுக்க முடியாத சரித்திர உண்மைகள்!
சிங்களர்கள் வங்காளத்திலிருந்து தமிழர்களுக்குப் பின்னர் குடியேறியவர்களேயென்று இலங்கை சரித்திர ஆசிரியர்கள் கூறுகின்...றார்கள். இலங்கை சேதத்தின் புராதனக் குடிகள் தென்னிந்தியத் தமிழர்களேயன்றி சிங்களர்களல்ல. இந்த உண்மையை நிரூபணம் செய்வதற்கு சரித்திர ஆதாரங்கள் மலிந்து கிடக்கின்றன. டாக்டர் ஜி.ஸி.மெண்டிஸ் என்பவர் தாம் வரைந்துள்ள இலங்கை சரித்திரமும் உலக சரித்திரமும் என்ற நூலில் இலங்கையின் பூர்வீக மக்கள் வேடர்களே யென்றும், கி.மு. 543 ஆம் ஆண்டில் வந்த சிங்களர்கள் இலங்கைக்கு அந்நியர்களாகவேயிருந்தார்களென்றும் திட்டமாகச் சொல்லியிருக்கிறார். அதே புத்தகத்தின் 14 ஆம் பக்கத்தில் சிங்களர்களின் வருகைக்குச் சுமார் ஆயிரம் வருடங்களுக்கு முன்னதாகவே ஆரியத் தமிழர்கள் இலங்கைக்கு வந்திருக்க வேண்டும் என்றும் கூறப்பட்டிருக்கிறது. இதுபோல் திரு.கீஜர் என்னும் பிரபல சரித்திர ஆராய்ச்சியாளர் தம்முடைய மகாவம்சத்தில் பின்வருமாறு தெரிவித்திருக்கிறார்,
இலங்கையின் பூர்வீகக் குடிகள் நாகர்களும் யக்ஷர்களுமே, சிங்களர்களின் வருகைக்கு முன்னால் இவ்விரு வகுப்பைச் சேர்ந்த மன்னர்களும் இலங்கையை ஆண்டு வந்தார்கள். அந்த அரசர்களுள் மணியக்கிகா, மஹேதரன், குலோதரன் ஆகிய நாக வம்சத்து மன்னர்களும், குவினி, மஹாகல சேனன் ஆகிய யக்ஷ வம்சத்து மன்னர்களும் குறிப்பிடத்தகுந்தவர்கள். கி.மு.543 ஆம் வருடத்திற்கு முன்பு வரை சிங்களவர்கள் இலங்கைக்கு அந்நியர்களாகவே இருந்தார்கள்.



நாகர்களும் யக்ஷர்களும் யார்?

நாகர்கள் என்ற பதத்திற்கும், யக்ஷர்கள் என்ற பதத்திற்கும் முறையே சர்ப்பங்களை பூஜிப்பவர்கள் பிசாசங்களைப் பூஜிப்பவர்கள் என்று பொருள். இலங்கையிலிருந்த புராதனத் தமிழர்கள் சர்ப்பங்களையும் பிசாசங்களையும் பூஜை செய்பவர்களா...க இருந்து அது காரணமாக இப்பெயர்கள் அவர்களுக்கு வழங்கப்பட்டிருக்கக் கூடும். தவிர பண்டைக் காலத்து திராவிடர்களிற் பொரும்பாலோர் வேட்டையாடுவதையே ஜீவனமாகக் கொண்டிருந்தார்கள்.

சிங்களவ‌ர் சரிதை என்ன கூறுகிறது?

ஆகையால், வேடர்களென்ற பெயரும் அவர்களுக்கு உண்டாயிற்று. இந்த அபிப்பிராயத்தை திரு.ஜான் எம்.செனிவிரத்னா என்ற பிரபல சரித்திர நூலாசிரியர் தம்முடைய சிங்களர் சரிதை என்ற புத்தகத்தில் ஆதரிக்கிறார். அவரும் வித்யானுகூல லங்கா இதிகாசபா என்ற நூலின் ஆசிரியரான திரு.டப்ளியூ.எம்.பெரேராவும் இலங்கை புராதனக்குடிகளாகிய நாகர், யக்ஷர், வேடர் ஆகியோர்களைப்பற்றி பின்வருமாறு எழுதியிருக்கின்றார்.
நாகர், யக்ஷர்,வேடர்ஆகியோர் திராவிட வம்சத்தைச் சேர்ந்தவர்கள் மணிக்கீகா, மஹோதரன், குலோதரன், குவினி, ராவணன், மஹாகல சேனன் முதலான திராவிட மன்னர்கள் சிங்களவர்களின் வருகைக்கு முன்னால் இலங்கையை ஆண்டு வந்தவர்கள் அய்ரோப்பியர்கள் அபிப்பிராயம். மேற்படி ஆதாரங்களைத்தவிர டாக்டர் கால்டுவெல், டாக்டர் ஜி.யு.போப் முதலான ஐரோப்பிய ஆராய்ச்சியாளர்களும் இவ்வாறே கூறியிருக்கின்றார்கள். தமிழர் என்ற தமிழ்ப்பதத்திற்கு திராவிடர் என்பது சமஸ்கிருத மொழிபெயர்ப்பென்றும் ஆகையால் இலங்கையின் பூர்வீகக் குடிகளான திராவிடர்கள் தென்னிந்தியத் தமிழர்களேயென்றும் அவர்கள் ஊர்ஜிதம் செய்திருக்கின்றனர்.

முதலில் போர்த்துக்கீசர், பின்னர் ஒல்லாந்தர், இறுதியாக ஆங்கிலேயர் இலங்கையை முற்றாக‌க் கைப்பற்ற முன்னர் அங்கு மூன்று சாம்ராஜ்ஜியங்கள் இருந்தன. இதில் தமிழர்களுகென்று ஒரு தனிச் சாம்ராஜ்ஜியமும் இருந்தது. கடைசியாக கண்டி சாம்ராஜ்ஜியத்தில் சிங்களவரை ஆண்ட இராஜ ராஜசிங்கன் கூட தமிழன் (நாயக்கன்) ஆகும். இது சரித்திரத்தை நன்கு அறிந்த சிங்களவருக்கும் தெரியும். ஆங்கிலேயர்தான் ஆட்சி புரிவதற்கு இலகுவாக, மூன்று சாம்ராஜ்ஜியங்களையும் ஒன்றாக்கி இலங்கை என்ற நாட்டை உருவாக்கினார்கள். ஆனால், அவர்கள் சுதந்திரம் கொடுத்துவிட்டு ஓடும் போது தங்கள் இணைத்ததைப் பிரித்துவிட்டுப் போகாதமையினாலேயே இன்று நாம் சிங்களவனின் கொடுங்கோல் ஆட்சியில் செத்து மடிகின்றோம். எனவே நாம் புதிதாகவொன்றும் தனி நாடு கேட்டுப் போராடவில்லை. எமது பூர்வீக நாட்டைத்தான் திரும்ப அடைய முயற்சிக்கின்றோம்.

-நன்றி.